Skip to main content

நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது எல்கேஜி படிக்க வந்தவர் டிடிவி தினகரன்: ஓபிஎஸ்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
ops-eps-ttv


பெரியகுளத்தில் நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது எல்கேஜி படிக்க வந்தவர் டிடிவி தினகரன் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர்,

வர்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை வைத்து ஜெயலலிதாவின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க நினைத்தார்கள். நான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குகிறது.

ஜெயலலிதா இறந்தபோது திவாகரன் என்னிடம் கேட்டார். நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் ஏற்க முடியாது என்று சொன்னேன். ஏன் என்று திவாகரன் கேட்டார். 16 பேர் இங்கு உள்ளனர் (தினகரனின் உறவினர்கள்). எல்லோரும் என்னை பகைவனாய் பார்பார்கள் என்றேன். தற்போது வரை தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியை கைபற்ற தினகரன் நினைத்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தினகரன் முதல்வராக வேண்டும் என சதி செய்தார். எனவே நான் உயிரோடு இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஜெயலலிதாவே சொன்னார். தர்மயுத்தத்தின் போது நாங்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என அமைச்சர்களை அடிக்க வந்தவர் தினகரன். தினகரனின் அத்தனை முயற்சிகளையும் தவிடு பொடியாக்குவோம். தினகரன் எங்களை துரோகி என்கிறார். அவர் பெரிய தியாக செம்மலல்ல. என்னை அறிமுகம் செய்ததாக அவர் சொல்கிறார். பெரியகுளத்தில் நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது அவர் எல்கேஜி படிக்க வந்தவர்.

 

சார்ந்த செய்திகள்