வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குக்களை பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
1. திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 (47.3%).
2. அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 (46.51%).
3. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 (2.63%).
இந்த மூன்று கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நோட்டாவிற்கு 9,417 (0.92%) அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் 10,26,055 மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் (0.79%) வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.