அமைச்சர் ஒ.எஸ். மணியணின் வலதுகரமாகவும், எஸ்.பி.வேலுமணியின் இடதுகரமாகவும் இருந்துவந்த எடமணல் பாபு என்கிற மணல் பாபுவை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள கிராமமான எடமணலை சேர்ந்தவன் ரமேஷ்பாபு. சாதாரன தினக்கூலியாகவும், ஒருவேலை உணவிற்கே வழியற்றநிலையும் இருந்த ரமேஷ்பாபுவிற்கு தற்போது பல கோடிகளுக்கு மேல் சொத்து வந்ததற்கு காரணம் மணல் கடத்தலும், இரால் குட்டைகளும், காண்ட்ராக்ட் வேலைகளும் தான்.
இதுகுறித்து காவல்துறை வாட்டாரத்தில் விசாரித்தோம். சாதாரன மகேந்திரா வேன் டிரைவராக காலத்தை துவங்கியவர், பிறகு அதிமுகவின் சீர்காழி எம்.எல்.ஏ. சந்திரமோகணுக்கு பர்சனல் உதவியாளர் ஆனார். அதன் மூலம் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு மணல் கடத்தல் ஒப்பந்த பணிகளை செய்வது என பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
அதன் பிறகு சிட்டிங் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணிக்கும், ஒ.எஸ்.மணியனுக்கும், எம்.எல்.ஏ. பாரதிக்கும் சகலமுமாக மாறினார். மணல் பாபு என்று சொன்னால் அமைச்சர் சொன்னதுபோல் என்கிற அளவிற்கு வளர்ந்தார். (அரசு அதிகாரிகள் முதல், அரசியல் பிரமுகர்கள் வரை அவருக்குசல்யூட் அடிக்காதவர்கள் இல்லை என்பதை நமது நக்கீரனில் மூன்று முறை செய்தியாகியுள்ளோம்).
இந்த முறை ஒ.எஸ்.மணியன் வேதாரன்யம் தொகுதியில் போட்டியிட்டபோது தனது சாகக்களை கொண்டு டூவிலர் சீட்டிலும், பெட்ரோல் டேங்கில் பாலீத்தின் பையிலும் பணம் கொண்டு சென்று தொகுதியில் வாக்குகளுக்கு பட்டுவாடா செய்தார். அதன் மூலம் அமைச்சர் மணியனுக்கு மேலும் விசுவாசமானார்.
இன்றைய நிலவரப்படி சுமார் 120க்கும் அதிகமான லாரிகள், 10க்கும் அதிகமான கலவைமெசின், 10க்கும் அதிகமான ஜே.சி.பி. கிட்டாஜ், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை சொத்துக்களையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.
அதோடு அமைச்சர்கள் இருவரின் சொத்துக்களுக்கும் பினாமியாகவும் இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி வந்ததும், தனக்கு சாதகமான அதிகாரிகளை சீர்காழிக்கு கொண்டுவந்து மணல் கடத்தல், இரால் குட்டை, சேம்பர் கால்வாய் என பல தொழில்களை கன கச்சிதாமக செய்து வந்தார். அதற்கு அதிமுகவில் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் கூடிக்கொண்டே இருந்தது. இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு எதிரானவர்களை அச்சுருத்தும் வகையில் ''என்னிடம் இரண்டு துப்பாக்கிகள் உள்ளது. போட்டு விடுவேன்'' என அடிக்கடி எதிர்ப்பவர்களை அச்சுருத்தியபடியே இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தொழில் நிமித்தமாக சீர்காழி கடை வீதியில் உள்ள ஜாகிர் உசேன் பஸ் அதிபரை பார்க்க சென்றார். அப்போது நாட்டு வெடிகுண்டை வீசி, அரிவாளால் வெட்டியுள்ளனர். மணல் பாபு கொலைசெய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.