தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகவும் சட்டமன்ற தேர்தல் காரணமகவும், 6 மாதங்களுக்கும் மேலாக மின்சார துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அனைத்து துணை மின் நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டு மின் ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய பழுதுகளை முழுமையாக அகற்றி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து திருச்சி மாவட்ட மின் பகிர்மான தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “திருச்சியில் மொத்தம் 7 மின் பராமரிப்பு கோட்டங்கள் உள்ளன. அதில் 52 துணை மின் நிலையங்கள், அவற்றில் 350 மின்னூட்டிகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக 500 மின் ஊழியர்களை கொண்டு சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் தற்போது 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டது. 252 மின்கம்பங்கள் சாய்ந்து நிலையில் அவற்றை சீர் செய்யப்பட்டது. 6200 இடங்களில் மின் கம்பங்களை உரசியும் மின்கம்பங்கள் லோடு சேர்ந்து வளர்ந்து நின்ற மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. 200 மின் மாற்றிகள் புதிய திறப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரம் கிலோமீட்டர் மின் பாதைகள் முழுமையாக சீரமைத்து தர அளிக்கப்பட்டுள்ளதாகவும், இனி மின் தடையே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்.
இருப்பினும் துறையூர் கொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தோடு சேர்ந்து இருக்கக்கூடிய மின்கம்பங்களில் சிறிய ரக விலங்கினங்கள் ஆன அணில், மயில், பாம்பு ஒரு சில நேரங்களில் பறவைகள் உள்ளிட்டவைகளால் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும் இவை மின்கம்பங்களில் வந்து அமர்வதும் ஓடுவதும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் ஏற்படும் மின் துண்டிப்பு உடனடியாக ஊழியர்களை வைத்து சரிசெய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.