Skip to main content

''நாலு வருடம் ஆகிறது எதுவுமே செய்யவில்லை...''- எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு  

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

"It's been four years and the MPs have not done anything..." SP Velumani alleged

 

'தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் என்பதில் அதிமுக நிலையாக உள்ளது. தமிழக பாஜக தலைவரும் இருமொழிக் கொள்கையே தமிழகத்திற்கு சரியானது என்று தெரிவித்துள்ளார்' என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்,  ''காங்கிரஸ் ஆட்சியில் தான் மும்மொழி கொள்கையை கொண்டு வந்தார்கள். இப்பொழுது அந்த சூழ்நிலை இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவுப்படுத்தி இருக்கிறார். தமிழகத்திற்கு எப்பொழுதும் தமிழ் தான். திமுகவிற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் எடுக்கிறார்கள். எப்பொழுதுமே தமிழ்நாடு இந்தியை ஏற்றுக் கொள்ளாது. அது எல்லோருக்கும் தெரியும். அந்த கொள்கையில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என பாஜக தலைவர் சொல்லிவிட்டார். எனவே அதைப் பற்றி பேச வேண்டியது இல்லை.

 

இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திமுக ஏதாவது ஒரு பிரச்சனை எடுத்து அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். அண்ணா என்ன கொள்கையை பின்பற்றினாரோ அதை ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் பின்பற்றினார்கள். அதை எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றுவார். ஃபர்ஸ்ட் திமுக நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் இந்தி இருப்பதை முதலில் மாற்ற சொல்லுங்கள். நாளை மத்திய விவசாயத்துறை அமைச்சர் கோவை வருகிறார். அவரை நானும் சந்திக்கிறேன்.

 

அப்பொழுது கொப்பரை தேங்காய் பிரச்சனை உள்ளிட்ட எல்லா பிரச்சனையும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்கிறோம். நாலு வருடம் ஆகிறது எம்பிக்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் காவிரி பிரச்சினைக்காக அதிமுக எம்பிக்கள் காவிரி ஆணையம் அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கினார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு  போகிறார்களா என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி சொல்வதைப் போல அவர்கள் சீட்டை தேய்த்து விட்டு தான் வருகிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்