தமிழகத்தில் மேலும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார், சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக சுதன், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ், ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா, மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர் செயலாளராக பாஸ்கர பாண்டியன், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம், கூட்டுறவுத்துறைப் பதிவாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.