தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ளது பொய்யுண்டார்கோட்டை கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் மனைவி கனிமொழி நிறைமாத கர்ப்பிணி. ஒவ்வொரு மாதமும் வடக்கூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றார். சுயப்பிரசவம் தான் நடக்கும் அதனால வேற எங்கேயும் போக வேண்டாம். வீட்லயும் பிரசவம் பார்க்க கூடாது லேசா வலி வந்ததும் இங்கே வந்துடனும் என்று சொல்லி சொல்லி அனுப்பினார்கள்.
16 ந் தேதி வயிற்றுவலி ஏற்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சொன்னது போலவே வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்த்தனர். முதலில் வலி குறைந்தது.
மாலை மீண்டும் வலி ஏற்பட்ட போது சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை செவிலியர்களே இருந்தனர். மருத்துவரை வரச் சொல்லுங்க இல்லன்னா 108 ல ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புங்க என்று கெஞ்சினார்கள் உறவினர்கள். மருத்துவர் இதோ வருகிறார் என்றே பதில் சொன்னார்கள் செவிலியர்கள் நள்ளிரவை தாண்டியதும் வலி அதிமானது அதன் பிறகு செவிலியர்களே பிரசவம் பார்த்தார்கள்..
குழந்தை சுயப்பிரசவம் தான் ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர் உறவினர்கள். மருத்துவர் இருந்திருந்தாலோ தஞ்சைக்கு அனுப்பி இருந்தாலோ குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். கடைசி வரை மருத்துவர் வரல. குழந்தை இறந்த தகவல் அறிந்து வேகமாக வரும் போது விபத்து என்று தனியார் மருத்துவமனையில் போய் படுத்துவிட்டார். பி மருத்துவர் பணி செய்யாமல் குழந்தை பலியாக காரணமாக இருந்ததால் பணி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கிராம மக்களும் உறினர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். போலிசார் குவிக்கப்பட்டனர் ஆனால் கோரிக்கை ஏற்கப்படும் வரை வீட்டுக்கு போகமாட்டோம் என்று இன்று இரவு வரை போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
வீட்ல பிரசவம் பார்த்தால் கைது செய்யும் அரசாங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்தால் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதா? ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா என்கின்றனர் உறவினர்கள்.