உலகின் மூத்த மொழியான தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தமிழ் மொழியை நசுக்கப் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது. உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் உள்ளவரை தழைத்தோங்கும்.
கே.சி. பழனிச்சாமி நீக்கத்தின் பின்னணியில் யாரும் இல்லை. கட்சியின் கொள்கையை மீறும் விதத்தில் பேசியதால்தான், அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அ.தி.மு.க. விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? இந்த விஷயத்தில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.
மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தே தீருவோம் என அவர் கூறினார்.