மறைந்த தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது. இதனால் தான் வருகிற ஜூன் 5- ஆம் தேதி மத்திய, மாநில அரசை கண்டித்து தே.மு.தி.க. சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்டவைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தே.மு.தி.க. கட்டமைப்பு என்றும் வலிமை மிக்கது தான். அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். வெற்றியை கண்டு ஆணவம் படுவதோம், தோல்வியைக் கண்டு துவண்டு போவதும் கட்சி தே.மு.தி.க.விற்கு கிடையாது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது விஜயகாந்திற்கு என்றைக்குமே நட்புறவு என்றைக்குமே இருக்கும். ஸ்புட்னிக் தடுப்பூசி ஆய்வில் திருப்திகரம் இல்லாமல் இருந்திருக்கலாம் நமது மக்களுக்கு எந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்தப் பின் கூட்டணிப் பற்றி ஆலோசித்து தலைமை அறிவிக்கும்". இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.