Published on 25/06/2021 | Edited on 25/06/2021
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகத்தில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும். தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா இருப்பது உறுதியானது. புதிதாக காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, பலருக்கு டெல்டா பிளஸ் கரோனா வந்து சென்றுள்ளதா என ஆய்வுசெய்துவருகிறோம். பரிசோதனைக் கூடத்தை ரூபாய் 2.30 கோடி செலவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.