திருச்சி மத்திய மண்டல காவல்துறையினருக்கான குறைதீர் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இக்கூட்டம் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அச்செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘காவல்துறையினரின் குறைதீர் கூட்டம் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் வரும் 16ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் ஒருமணிவரை இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக 500 பேர் மனு அளித்துள்ளனர்’.
திருச்சி மத்திய மண்டல அளவில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் இன்று (15.12.2021) நடைபெற இருந்த காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட காவல்துறையினர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பணியில் உள்ள காவல்துறையினர், ஓய்வுபெற்ற போலீசார், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று 9 மாவட்ட காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.