Published on 16/12/2021 | Edited on 16/12/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16/12/2021) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.