Skip to main content

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு என வீட்டு பட்டா ரத்து செய்யலாமா? கலெக்டரிடம் கெஞ்சும் கரூர் மக்கள் !

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு சார்பில், ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி தங்களது நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர்கள் பலர் தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கண்டித்து அவர்களுக்கு எதிராக கோஷம் போட்டபடியே தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் பேரணி சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும், பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிடு... என மக்கள் ஒட்டு மொத்த கூட்டமாய் ஆர்பரித்தார்கள்.

 

 Can a house patta be canceled as temple occupation? The people of Karur who plead with the collector!

 

இந்த தீடீர் போராட்டத்தின் தகவல் அறிந்த கலெக்டர் அன்பழகன் எழுந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி போலீசார் கைகளை கோர்த்தபடி பாதுகாப்புக்கு நின்றனர். அப்போது நில உரிமை பாதுகாப்புக்குழுவினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 Can a house patta be canceled as temple occupation? The people of Karur who plead with the collector!

 

அப்போது, நாங்கள் கடன் வாங்கியும், கையில் இருந்த பணத்தை செலவு செய்தும் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில் தான் கரூர் மாவட்ட பகுதியில் வீடு வாங்கினோம். இந்த நிலையில் திடீரென கோவில் நில ஆக்கிரமிப்பு எனக்கூறி பட்டாக்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் வருவாய்துறை இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுக்கு எடுத்துகூறி உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த மக்கள் தீடீர் போராட்டத்திற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது.. 

 

கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர் சபையினர் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் தெற்குமடவளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கடையினை இழுத்து பூட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெண்ணெய்மலை, காதப்பாறை, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு என உருவாக்கி, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரூர் வெண்ணெய்மலை, காதப்பாறை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னரே ஊர்வலமாக கலெக்டர் அலுவலக முற்றுகை கோஷம் என்று கரூர் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டது. 

 

இது குறித்து கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழுவினர். பத்திரிகையாளர்களிடம் நாங்கள் கடன் வாங்கியும், கையில் இருந்த பணத்தை செலவு செய்தும் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில் தான் கரூர் மாவட்ட பகுதியில் வீடு வாங்கினோம். இந்த நிலையில் திடீரென கோவில் நில ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்வோம் என்பது நியாயமா?இந்த பிரச்சனைகளை உடனே தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் அடுத்த அடுத்த போராட்டங்கள் வெடிக்கும் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்