திருச்சி பெல் தொழிற்சங்கத்தை எப்போதும் தி.மு.க. தான் ஜெயிக்கும். எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பாட்டாலும் தி.மு.க. தொழிற்சங்கம் மட்டுமே தொடந்து வெற்றிபெறும். இதனால் கடந்த 51 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. வசம் இருந்த பெல் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை பறிகொடுத்தது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் உட்கட்சி பிரச்சனைகளோடு, பஞ்சாயத்து உட்பட் நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து சங்கத்தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தலும் உடனே நடத்துகின்றார்கள். இதன் அடிப்படையில் திருவரம்பூர் பெல் பாய்லர் தொழிற்சாலையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற்றது.
இதில் அண்ணா தொழிற்சங்க தலைமையில், அம்பேத்கர்யூனியன், இன்ஜினியர் அதிகாரிகள் யூனியன், டிடிஎஸ், மற்றும் ஏஐடியூசி, பிஎன்எஸ்யூ, ராணிப்பேட்டை, எம்ப்ளாயீஸ் யூனியன், திருமயம் பிபிபிடிஎஸ், ஆகிய தொழிற்சங்கள் எல்லாம் இணைந்து போட்டியிட்டன.
இதே நேரத்தில் தி.மு.க.வின் தொமுச தலைமையில் ஐஎன்டியூசி, சிஐடியூ, ராணிப்பேட்டை பெல் பிஏபிஎஸ்யூ, சூப்பரவைசர்ஸ் யூனியன், திருமயம் யூனியன் இணைந்து போட்டியிட்டார்கள். இவர்கள் இல்லாமல் மூன்றாவது அணியாக பாரதி மஸ்தூர் சங்கம் தனித்து போட்டியிட்டது.
இதில் அண்ணா தொழிற்சங்க கூட்டணியில் சார்பில் வில்லியம் பீட்டர், பிரபாவதி, ஜெயலட்சுமி, லோகநாதன், இளங்கோவன் ஆகிய 5 பேர் இயக்குநர்களாக ஜெயித்தார்கள்.
தி.மு.க. கூட்டணியில் இளவரசி, மோகன், இளங்கோ, மகேஷ்குமார், கல்யாண்குமார், ஆகிய 5 பேர் இயக்குநர்களாக ஜெயித்தனர். பாரதிய மஸ்தூர் சங்கத்தில் போட்டியிட்ட பத்மநாபன் இயக்குநராக வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து பெல் கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத்தலைவர், பதிவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற 11 இயக்குநர்களும் வாக்களித்தார்கள். பாரதிய மஸ்தூர் சங்க இயக்குநர் பத்மநாபன் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த வில்லியம் பீட்டர், தலைவராகவும், இளங்கோவன் துணை தலைவராகவும், வெற்றிபெற்றனர். கடந்த 51 ஆண்டுகளுக்கு பிறகு பெல் கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவர் துணைத்தலைவர் பதிவியை அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.