திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசி
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 4 மணி நேரமாக நீடித்துள்ளது. குழந்தை மீட்கப்பட்டு உடனே முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அத்தனை மருத்துவ உபகரணங்களும் அங்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கையில் கயிறு கட்டி வெளியே மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து டேனியில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த சிறப்பு குழந்தைமீட்பு கருவி மூலம் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞரின் மூன்று வயது குழந்தை இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறில் சிக்கிக் கொண்ட நிலையில் அந்த குழந்தை மீட்கப்பட்டது. அதனை அடுத்து இதுபோன்று ஆழ்துளை கிணறுகளில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்காக ஒரு சிறப்பு கருவியை மணிகண்டனை கண்டுபிடித்து, இதுபோன்று ஏதேனும் விபத்துக்கள் நடக்கும் இடங்களில் குழந்தையை தனது சிறப்பு கருவி மூலம் மீட்கும் பணியை செய்துவந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.