விசாகப்பட்டினத்தில் வி.வி.சுப்பா ரெட்டி என்பவர் 70 நிறுவனங்களை போலியாக பதிவு செய்து ரூ. 400 கோடியை ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்துள்ளார். இவரை ஜி.எஸ்.டி. புலனாய்வுத்துறை அதிகாரி கடந்த திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
மேலும் ஹைதராபாத், குண்டூர் ஆகிய பகுதிகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இவர் 30 போலி நிறுவனங்களை நடத்திவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கென்று வெற்று காசோலை புத்தகத்தையும், வங்கி கணக்கையும் அந்த நிறுவனங்களின் பெயர்களிலேயே வாங்கியிருக்கிறார். இது அனைத்திற்கும் அவரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை கொடுத்து அவர் பதிவு செய்துள்ளார். இந்த நிறுவனங்கள் மூலமாக ஜூலை 2017-ல் இருந்து ஜனவரி 2019 வரை ரூ. 400 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜி.எஸ்.டி. புலணாய்வுத்துறை கைது செய்துள்ளது.
இதற்குமுன் கடந்த டிசம்பர் மாதம் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன பெண் அதிகாரி பூனம் சர்மா என்பவர் போலி ரசிதுகளை காட்டி ரூ. 43 கோடி மோசடி செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.