இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (11/04/2022) இரவு 09.00 மணியளவில் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், இந்தியா- அமெரிக்கா இரு தரப்பு உறவு, ரஷ்யா- உக்ரைன் விவகாரம், இந்தோ- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா, அமெரிக்காவின் நல்லுறவு உலகின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்யா- உக்ரைன் அதிபர்களிடம் வலியுறுத்தினேன். உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைய வேண்டும்" என்றார்.
உக்ரைனில் போர் நீடிக்கும் நிலையில், அமெரிக்கா, இந்திய தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.