Skip to main content

புதுச்சேரியில் 77.80 % வாக்குப்பதிவு; மோடியை பதவியிலிருந்து இறக்க மக்கள் தயாராகிவிட்டனர் - நாராயணசாமி பேட்டி! 

Published on 19/04/2019 | Edited on 19/04/2019
 
 
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலும்,  தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. 
 
p
 
முதலமைச்சர் நாராயணசாமி புஸ்ஸி வீதியிலுள்ள  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும்,     சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடியும் வாக்களித்தனர். 
 
 
தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகரில்  காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட பூத்தை காவல் துறையினர்  எட்டி உதைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சிறிது நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு, தொடர்ந்தது. 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்த 3900 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு புதுச்சேரி,  காரைக்கால் பகுதியில் இரவு எட்டுமணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 
 
p
 
புதுச்சேரியில் 77.80 சதவீதம் வாக்குப்பதிவும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 72.15 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
வாக்குப்பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "  நாட்டை சின்னப்பின்னமாக்கிய  மோடியை பதவியில் இருந்து இறக்க மக்கள் தயாராக விட்டனர்.  ராகுல் பிரதமரானால்தான் விடிவு காலம் பிறக்கும்  என மக்கள் நினைக்கின்றனர். 
இது வாக்களிக்கும் மக்கள் முகங்களில் தெளிவாக தெரிகிறது.  அதேபோன்று மாநிலத்தில் இலவச அரிசி உள்ளிட்ட திட்டத்துக்கு தடையாக இருக்கும் கிரண்பேடிக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் என். ஆர் காங்கிரசுக்கும் முடிவு கட்டுவார்கள்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்