Skip to main content

''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி 

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயியுள்ளனர். இதில் திரையுலகை சேர்ந்த சிலர் அவ்வப்போது வீடியோ மூலம் பொது மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்...

 

bf

 

''இந்தச் சமயத்தில் நாம் செய்ய வேண்டியது எல்லாமே, வெளியே எங்கேயும் போகாமல் அமைதியாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நம்மால் யாருக்கும் எந்தவொரு பிரச்சினையும் வராமல் மற்றவர்கள் பிரச்சினை நமக்கு வராமல் அமைதியாக வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். நீங்கள் கண்டிப்பாக கூகுளில் கரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது, அதன் தீவிரம் என்ன, அது வந்தால் நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு பிரச்சினைகள் என்பதை அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரியான வைரஸினால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய அழிவு இருக்கிறது என்பதை ஆங்கிலத்தில் கான்டேஜியன் என்ற படமாக எடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் வைரஸ் என்ற படமாக எடுத்திருக்கிறார்கள்.

 

 

நீங்கள் ஓய்வெடுக்கும் போது குடும்பத்துடன் அந்தப் படங்களைப் பாருங்கள். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே போகும் போது, பணமில்லாமல் நிறையப் பேர் வாங்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையில்லாத பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் சாலைக்குச் செல்லும் போது ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுச் சொல்லுங்கள். தேவைப்படும் ஏழைகள் அதை எடுத்துக் கொள்வார்கள். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு மீட்டாராவது இடைவெளி விட்டு நிற்க முயற்சி பண்ணுங்கள். தன் குடும்பத்தை எல்லாம் மறந்து நமக்காகத் தான் மருத்துவர்களும், காவல்துறையினரும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே சொல்லாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்