Skip to main content

ஜோடி, பேட்ட படத்திற்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் சிம்ரன், திரிஷா 

Published on 15/02/2019 | Edited on 15/02/2019
st

 

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். 96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் தற்போது சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சதுரம் 2’ திரில்லர் படத்தை இயக்கியவர்.

 

 

மேலு இப்படம் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்..... "இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள், நடிகையர்களின் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது” என்றார். இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா, ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘கொரில்லா' காமெடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

த்ரிஷா பளீர்னு இருப்பாங்க... சிம்ரன் குறுகுறுனு பாப்பாங்க!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

director praveen gandhi said simran and trisha

 

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி, நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். திரையுலகத்திற்கு தான் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளான சிம்ரன் மற்றும் த்ரிஷா குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"த்ரிஷா பெரிய நடிகையாக வருவாங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். எனக்கு கொஞ்ச ஜாதகம் தெரிஞ்சதுனால அவங்க ஜாதகத்தை பார்த்தேன். அப்போதான் தெரிஞ்சது இந்த பொண்ணு சினிமாவில் பெரிய நடிகையாக வரும்னு. நீங்க வேணுன்னா எழுதி வச்சிக்கோங்க அவங்க ஜாதகப்படி இன்னும் கொஞ்ச நாளில் அரசியலுக்கு கூட வருவாங்கன்னு ஜாதகத்தை பார்த்தவர்கள் சொன்னார்கள். ஸ்டார் படத்தில் சிம்ரன் நடிக்கும் காட்சியில் பின்னாடி முதல் ஆளாக த்ரிஷாவை நிற்க வைத்தேன். இதை சிம்ரன் குறுகுறுன்னு பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஏன்னா த்ரிஷா சும்மா பளீர்னு இருக்கும். சொல்லப்போனால் த்ரிஷா படத்திற்கு வருவதற்கு முன்பு இன்னும் அழகாக இருப்பாங்க. நான் சொன்ன மாதிரியே த்ரிஷாவை பார்த்த சிம்ரனும் இந்த பொண்ணு சினிமாவில் நல்ல வருவாங்கன்னு சொன்னாங்க" என்றார்.