Skip to main content

நிஜ உலகம், நிஜ மனிதர்களோடு  அசத்த வரும் 'டாம் அண்ட் ஜெர்ரி' கூட்டணி..

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
tom and jerry

 

 

குழந்தைகள் மட்டுமே கார்ட்டூன் பார்ப்பார்கள்  என்பது பொதுவான கருத்து .அக்கருத்தினை உடைத்த கார்ட்டூன்கள்  மிகவும் குறைவு. அவற்றுள்  மிகவும் புகழ்பெற்றது, 'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன்கள்.  இந்த கார்ட்டூன்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இன்றும் அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.

 

'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன்கள் முதன்முதலாக 1940 ஆம் ஆண்டு, வில்லியம் ஹன்னா  மற்றும் ஜோசப் பார்பேரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 1992 ஆம் ஆண்டு, முதன் முதலாக 'டாம் அண்ட் ஜெர்ரி' திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து, இதுவரை 16 'டாம் அண்ட் ஜெர்ரி' திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

 

இதுவரை வெளிவந்த 'டாம் அண்ட் ஜெர்ரி' படங்கள், அனிமேஷன்  திரைப்படங்களாகும். இந்தநிலையில், தற்போது முதன் முதலாக 'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன், அதே பெயரில், லைவ் ஆக்ஷன் படமாக வெளியாகவுள்ளது. புகழ் பெற்ற ஆங்கில படத்தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் தயாரிக்கும் இந்த லைவ் ஆக்ஷன் படத்தில், நிஜ உலகில், நிஜ மனிதர்களோடு இணைந்து நம்மை சிரிக்க வைக்க இருக்கின்றன டாமும் ஜெரியும். 

 

 


'டாம் அண்ட் ஜெர்ரி' லைவ் ஆக்‌ஷன் படம், அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இந்த லைவ் ஆக்ஷன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'டாம் அண்ட் ஜெர்ரி' புது வடிவில் வெளியாகவுள்ளதை, உலகமெங்கிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்