Published on 28/11/2019 | Edited on 28/11/2019
சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே ஆரம்பித்து பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 2020ஆம் ஆண்டும் மீண்டும் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.