Skip to main content

அடுத்தகட்டத்திற்கு சென்ற கோபி, சுதாகர் - புதிய அறிவிப்பு வெளியீடு

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Parithabangal gopi sudhakar movie update

 

யூ-ட்யூபில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்பு திரைத்துறையில் நுழைந்து  பயணித்து வருபவர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் யூ-ட்யூபில் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளையும் கிண்டல் செய்து தற்போது பல்வேறு விஷயங்களை நகைச்சுவை கலந்து வீடியோவாக வெளியிட்டு வந்த கோபி மற்றும் சுதாகர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார்கள். 

 

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இருவரும் க்ரவுட் பண்டிங் முறையில் நிதியை திரட்டி 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரிக்க முயற்சித்தனர். அதன்மூலம் ஒரு தொகை திரட்டி ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ தலைப்பில் படம் உருவாவதாகவும் அதற்கான டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். இப்படத்தை எஸ்ஏகே என்பவர் இயக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பதாக இருந்தது. 

 

பின்பு கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படம் தாமதம் ஆவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்க சென்னை பிரசாத் லேப்பில் இன்று பூஜை நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்