Skip to main content

லோகேஷ் கனகராஜ் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

vijay sethupathi

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் 'மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.

 

இந்நிலையில், ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்தான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இப்படத்திற்கு 'மும்பைகர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டரை இயக்குனர்  ராஜமெளலி மற்றும் கரண் ஜோஹர் வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்