மலையாளத்தில் ஆபாச வெப்தொடர்களை இயக்கி வருபவர் லட்சுமி தீப்தா. இவர் மீது வெங்கனூரை சேர்ந்த 26 வயது இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அழைத்திருந்தார். அதில், "வெப்சீரியலில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக கூறி லட்சுமி தீப்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது. நானும் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்கச் சென்றேன். ஆனால், படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றவுடன் தான் தெரிந்தது அது ஆபாசப் படம் என்று. இதனால் நடிக்க மறுத்தேன். உடனே அங்கிருந்தவர்கள் என்னை மிரட்டினார்கள். படத்தில் நடிக்காவிட்டால் 5 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். எனவே இதற்குக் காரணமாக அந்த பெண் டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் லட்சுமி தீப்தாவை நேற்று கைது செய்தனர். பின்பு நெடுமங்காடு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து நேற்றைய தினமே நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு லட்சுமி தீப்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக லட்சுமி தீப்தா இயக்கத்தில் வெளியான வெப் தொடர்களில் அக்கா, தம்பி, மாமா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் லட்சுமி தீப்தா மீது புகார் அளித்திருந்தனர். அவர்கள் கொடுத்த புகாரில், தங்களை ஒரு சீரியலில் நடிக்க வைப்பதாக கூறி நடிக்க வைத்தனர். ஆனால் அது வெளியான பிறகு ஆபாச வெப் தொடராக இருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.