Skip to main content

"வாழ்வியல் நெறிகளில் சிறந்து விளங்கிய மாமனிதர்" - நினைவுகூறும் கமல்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

kamal tweet about abdul kalam

 

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்த அவரை இன்று அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர். சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்படத் தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்