Skip to main content

"என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்று சொன்னார்" -  ஹிப்ஹாப் தமிழா ஆதி

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

grshdjdtrjtrd

 

'மீசையை முறுக்கு' படத்துக்குப் பிறகு நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டி ரிபெல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி பேசியபோது...

 

"நிறைய பேருக்கு இது முதல் மேடை. அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப் பிரம்மாண்டமாக ‘அன்பறிவு’ படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தால்தான் இந்தக் கதையை எழுதினேன். இந்தப் படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால், நான் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தேன். இந்தப் படத்திற்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப் படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வார்கள். சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப் படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் இண்டி உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். துணிந்தே ரிஸ்க் எடுத்துள்ளோம். 

 

இரண்டே லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜா அவர்களுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் எஸ். துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது. அதை அட்டகாசமாக செய்து தந்த வாசுதேவனுக்கு நன்றி. தமிழ் தெரிந்த ஹீரோயின். அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண். ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தைக் கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம்தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒலித்த குரல் - மகிழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

hiphop adhi about his travelling flight announced information in tamil

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடிக்கிறார். 

 

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது தமிழில் ஒலித்த குரலை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்... என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல அறிவிப்பு பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம். 'வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்...' என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை. 

 

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் 'அருமை நண்பா' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

 

 


 

Next Story

"கவர்னருக்கு மாற்றில்லை" - டாக்டர் பட்டம் வாங்கிய ஆதி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

hip hop aadhi about governer rn ravi

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார். 

 

கடந்த மார்ச் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்றார். 

 

இந்நிலையில் கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கையில் இசைத் துறையில் (Music Entrepreneurship) என்ற பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் ஆதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "5 வருஷம் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருஷம் முடித்தேன். இந்த வருஷம் வாங்கிவிட்டேன். நடித்துக்கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. முனைவர் பட்டம் கவர்னர் கையில் தான் வாங்க வேண்டும். வேறெதுவும் மாற்றில்லை. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கே பெருமை" என்றார்.