நேற்று டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் குற்றம் சாட்டிய அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காததாலும், ரஞ்சன் கோகாய்க்கு எதிராக எந்த ஆதாரங்களுக்கும் இல்லாததாலும் அவர் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பாப்டே தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. இதனை எதிர்த்து பெண் வழக்கறிஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் உச்சநீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மீடூ புகாரை அடுத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் அனுமதிக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ரஞ்சன் கோகாயை எதிர்த்து சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தை அனுமதி அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா வட்டாரத்திலுள்ள சில பெண் பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதை மீடூ என்று குறிப்பிட்டார்கள். அச்சமயத்தில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.