Skip to main content

"தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நாள்" - தனுஷ் பெருமை

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

"A big day for Tamil cinema" - Dhanush Ghoot

 

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர், நடிகை உள்பட மொத்தம் ஐந்து விருதுகளை 'சூரரைப் போற்று' படம் வென்றுள்ளது. அதோடு 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றுள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமா மொத்தம் பத்து (10) விருதுகளை கைப்பற்றியுள்ளது. 

 

இந்நிலையில் தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட விருது வாங்கிய அனைவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ், "தேசிய விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் எனது நல்ல நண்பர் ஜி.வி பிரகாஷ். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நாள். பெருமையாக உள்ளது" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

மேலும் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "ஒரு நாள் நீங்கள் அதை பெரிதாக சாதிப்பீர்கள்... ஒரு நாள் நீ வெல்வாய்... ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது" என குறிப்பிட்டு 'சூரரைப் போற்று' படக்குழுவிற்கும் தன்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதே போல் உதயநிதி ஸ்டாலின், "68-வது தேசிய திரைப்பட விருதுகள் வென்று தமிழ்திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ள, நண்பர் சூர்யா, இயக்குநர்கள் வசந்த் சார், சுதா கொங்கரா, மடோன் அஷ்வின், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், நடிகைகள் அபர்ணா பாலமுரளி மற்றும் லக்ஷ்மி ப்ரியா அனைவருக்கும் என் வாழ்த்துகள்." என குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநரும் நடிகருமான சசிகுமார்  மற்றும் சீனுராமசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் விருது வாங்கிய அனைவருக்கும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்