கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் பேசியது.,
எனக்கு சார்பட்டா பரம்பரை படம் மிகவும் பிடித்திருந்தது; அதைப் போலவே சண்டைக்காட்சிகள் வேண்டுமென்று விரும்பியதால் இந்த திரைப்படத்திற்கு அன்பு அறிவு மாஸ்டர் தான் சண்டைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்; மாஸ்டர் நீங்க பண்ணலையின்னா நான் இந்த படத்தை பண்ணவில்லை என்று கேட்டுக் கொண்டேன். கதையைக் கேட்டுவிட்டு அவர்களின் பிசியான நேரத்திலும் என் படத்திலும் பணியாற்றினார்கள்; அவர்களுக்கு என் நன்றி
அடுத்தபடியாக என் வாழ்வில் இருக்கும் பெண்கள்; என் அம்மா இல்லத்தரசி, உலகத்திலேயே மிக கஷ்டம் என்பது இல்லத்தரசியாக இருப்பதுதான். அப்புறம் என் அக்கா, ஒரு பன்னாட்டு வங்கியில் பணிபுரிகிற அவர்களும் இந்தப் படத்திற்காக என பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்தார்கள். அடுத்தபடியாக என் பையனோட அம்மா (விவாகரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது) அவங்களும் நான் ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பதற்கு ஒரு காரணம், அடுத்து என் மனைவி. இப்படியான பெண்களுக்கும் கனவுகள் இருக்கும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆணும் பெண்ணும் ஒன்றுதான் என்ற கருத்தை சொன்னதால் இந்தப் படம் பண்ணவே ஒப்புக்கொண்டேன்
எனக்கு மார்கெட்டே இல்லையென்றார்கள். இந்தப் படம் 30 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இப்பொழுது என்னிடம் 9 படங்கள் கை வசமிருக்கிறது. நான் இன்னும் வளர்ந்து வருவேன் என நம்பிக்கை இருக்கிறது.