
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் உணர்வாளர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, அமைச்சரவையை கூட்டி ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தீர்மானம் இயற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியது.
கவர்னர் அந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சைக்கிள் பிரச்சார போராட்டம் தொடங்கியுள்ளனர்.
சிவகங்கையில் இருந்து சென்னை கவர்னர் மாளிகையை நோக்கி 10 இளைஞர்கள் சைக்கிள் மூலமாக புறப்பட்டனர். கொட்டும் மழையில் தங்களது பயணத்தை நவம்பர் 16ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கினர். சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் வரும் நகரங்கள், பேரூராட்சிகள், கிராமங்களில், ஏழு பேர் விடுதலை தொடர்பாக பிரச்சாரம் செய்தபடி வரும் குழு கவர்னரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.