Skip to main content

செல்போனில் பாலியல் தொந்தரவு...ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்த இளம் பெண்...!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

உத்தமபாளையம் அருகே செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை இளம் பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

 

 Younger woman killed businessman near Theni

 



தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே  இருக்கும் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் உறவினர்  பாண்டீஸ்வரன். அவரது மனைவி நிரஞ்சனா. இவர்கள்  ஒத்த பட்டியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மணிகண்டன்  கடந்த சில நாட்களாகவே நிரஞ்சனா வுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் நிரஞ்சனாவுக்கு  மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும்  நிரஞ்சனா  பற்றி  தவறாக மணிகண்டன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் கணவர் பாண்டீஸ்வரனுக்கு தெரிய வர, அவர் நிரஞ்சனாவிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ராயப்பன்பட்டியிலுள்ள மணிகண்டன் வீட்டுக்குச் சென்று மணிகண்டனிடம்  இருவரும் இதுதொடர்பாக கேட்டுள்ளனர் ஆனால் அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்ததும் பாண்டீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் நிரஞ்சனா அருவாளுடன்  ராயப்பன்பட்டி போலீசில் சரண் அடைந்தார். 

பின்னர் போலீசார் விரைந்து சென்று  மணிகண்டன் உடலை கைப்பற்றி உத்தமபாளையம்  அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் நிரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.அதோடு தப்பி ஓடிய கணவர் பாண்டீஸ்வரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான நிரஞ்சனா தனக்கு மணிகண்டன் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.