Skip to main content

காவிரி உரிமை மீட்புக்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் : பி.ஆர்.பாண்டியன் தகவல்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
p.r.pandiyan


 

காவிரி உரிமை மீட்பு தமிழகம் தழுவிய இருசக்கர வாகன பரப்புரை பயணம் நாளை வேதாரண்யத்தில் புறப்படுகிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்சநீதிமன்றம் உத்திரவை ஏற்று அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் நாளை 25ந் தேதி காலை 8 மணிக்கு வேதாரண்யம் இராஜாஜி பூங்கா அருகிலிருந்து பரப்புரை பயணம் எனது தலைமையில் காலை 8 மணிக்கு புறப்படுகிறோம். மணிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ துவக்கி வைக்கிறார். 
 

விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட சேவை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவளிப்பதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
 


10 மணி திருத்துறைப்பூண்டி, 
11 மணி மன்னார்குடி

12 மணி வடுவூர்

4 மணி தஞ்சாவூர்

5 மணி பூதலூர்

6 மணி திருக்காட்டுப்பள்ளி

7 மணி கல்லனை

8 மணி ஸ்ரீரங்கம் தங்கல்.

26ந் தேதி காலை 7 மணி திருச்சி

8 மணி முக்கொம்பு

9 மணி தொட்டியம்

11 மணி கரூர்

12. மணி ஈரோடு

5 மணி சேலம்

7 மணி மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்கும் பொதுக்கூட்டம்.
 

27 ந் தேதி காலை 8 மணி தொப்பூர்

10 மணி தர்மபுரி

11 மணி போச்சம்பள்ளி

12 மணி மத்தூர்

5 மணி வாணியம்பாடி

6 மணி ஆம்பூர்

7 மணி வேலூர்
மணித நேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் அஸ்லாம் பாஷா EXMLA கலந்துக் கொள்ளும் பொதுக் கூட்டம்
 

28ந் தேதி காலை 8 மணி காஞ்சிபுரம்

9 மணி ஸ்ரீபெரும்புதூர்

10 மணி பூவிருந்தமல்லி

11 மணி சென்னை

உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ நெடுமாறன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான், ஆரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கண்டன கூட்டத்தில் பங்கு
பெறுகிறார்கள்.



மாலை 4 மணி திருப்போரூர்

5 மணி மகாபல்லிபுரம்

7 மணி மரக்காணம்


29 ந் தேதி காலை 
8 மணி பாண்டிச்சேரி

9 மணி கடலூர்

11 மணி சிதம்பரம்

11.30 மணி கொள்ளிடம்

12 மணி சீர்காழி

4 மணி மயிலாடுதுரை

5 மணி காரைக்கால்

6 மணி நாகப்பட்டினம்
 

7 மணி திருவாரூர் நகரில் மனுநீதி கொடுத்த மண்ணில் முடிவடைகிறது. இதற்க்கான ஏற்பாடுகளை பொது செயலாளர பாலாறு வெங்கடேசன், தீட்சதர் பாலு, பொருளாளர் ஸ்ரீதர், தஞ்சை புண்ணியமூர்த்தி மண்டல தலைவர்கள் தர்மபுரி சின்னசாமி வேளச்சேரி குமார் தஞ்சை மண்டல தலைவர் டிபி கே.இராஜேந்திரன், கடலூர் விநாயகமூர்த்தி வயலூர் இராஜேந்திரன் காரைக்கால் இராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் நாகை ராமதாஸ்' திருவாரூர் செந்தில்குமார் தஞ்சை மணி திருச்சி ஹேமநாதன் காஞ்சீபுரம் துரைசாமி, சென்னை கோபிநாத், அசோக் ஜிலோதா, சுதா கடலூர் விஜயக்குமார் கொள்ளிடம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் நிர்வாகிகள் பயண வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

பயணத்தில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்கிறார்கள் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 TDF Vasan in Puzhal Jail

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கிச் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டுப் போடப்பட்டது.

 

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக் குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் அடைக்கப்பட்டுள்ளார்.   

 

 

Next Story

போலீசிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

trichy manapparai nearest two wheeler  youngster admitted hospital

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சேதுரத்தினபுரம், பொத்தமேட்டுப்பட்டி மற்றும் மணப்பாறை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொத்தமேட்டுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது மணல்மேல்குடியைச் சேர்ந்த மாதவன் (வயது 26), தாராபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 22) ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதையடுத்து போலீசார் கைது செய்தவர்களில் ஒருவரான ஆகாஷ் என்பவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் அங்கிருந்து போலீசாருக்கு போக்கு காட்டி விட்டுக் கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்று குமரபட்டியில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாதவன் வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஆகாஷ் மற்றும் மாதவனுக்கும் உதவியாக இருந்த குளித்தலையைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்பவரையும் கைது செய்தனர்.

 

இந்நிலையில் ஆகாஷை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் தனியார் கல்லூரி அருகே கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். எடுத்துச் சென்ற இருசக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு அழைத்து வரும் பொழுது, கலிங்கப்பட்டி பாலம் அருகே தான் திருடிய வாகனம் இருப்பதாகக் கூறியதால் வாகனத்தை விட்டு இறங்கி, காவலர்கள் ராமு மற்றும் தாசையாவை கீழே தள்ளிவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது ஆகாஷின் வலது கால் உடைந்தது. இதையடுத்து ஆகாஷ் மற்றும் ஆகாஷ் தள்ளிவிட்டதில் காயமடைந்த ராமு, தாசையா ஆகிய மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை போலீசார் இவ்வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற திருடன் கால் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.