கள்ளக்காதலை கண்டித்த உறவினரின் 4 வயது சிறுவனின் கழுத்தை அறுத்த கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஊர் சித்தேரியில் உள்ள ராமர் என்பவரின் மனைவி முருகேஸ்வரி(22). இவரது கணவர் ராமர் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அதையடுத்து தனது பிறந்த ஊரான கூகையூரை சேர்ந்த மற்றொரு உறவினரான அருள்ராஜ் எனும் முன்னாள் காதலுடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். சித்தேரியில் உள்ள ராமர் வீட்டில் ஒருசமயம் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் குடியிருந்த ராமரின் சித்தப்பாவான முருகேசன் பார்த்துவிட்டு உடனே சத்தம்போட்டு ஊரையே கூட்டிவிட்டார். அருள்ராஜை பிடித்து கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
அதுமட்டுமின்றி முருகேசன், சிங்கப்பூரில் உள்ள பரமேஸ்வரியின் கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, இங்கு நடந்ததை கூறிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த ராமர் ஊருக்கு வந்து மனைவியை மோசமாக அடித்து, உதைத்து திட்டியுள்ளார். கடுமையாக கண்டித்து விட்டு அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். இதையெல்லாம் முருகேசனும், அவர் மனைவி சங்கீதாவும் வேலை செய்யும் இடங்களிலெல்லாம் பரப்பியுள்ளனர்.
இதனால் பரமேஸ்வரிக்கு முருகேசன் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து முடியாததால் முருகேசனின் மகன் 4 வயது சிறுவன் நித்தீஷ் 23-8-2016 அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு தனது நண்பர்களுடன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, நித்தீசிடம் சென்று, பாசமாக பேச்சு கொடுத்தபடி அவனது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அழைத்துச்சென்று பிளேடால் சிறுவன் நித்தீசின் கழுத்தை அறுத்து கொலை செய்து நித்தீஷ் இறந்ததை உறுதி செய்ததும், அவனது உடலை அங்குள்ள கழிப்பறையில் தூக்கிப்போட்டுவிட்டு வந்து விட்டார் முருகேஸ்வரி.
தங்களின் மகனை காணாது தவித்த முருகேசன் குடும்பத்தார் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையின் தொடர் விசாரணையில் மாட்டிக்கொள்வோம் என பயந்த பரமேஸ்வரி பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனாலும் காவல்துறையினர் பரமேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் சிறுவனை கொலை செய்த பரமேஸ்வரிக்கு 2 கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.