Published on 20/04/2019 | Edited on 20/04/2019

வருகிற மே 19ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
01.05.2019 மற்றும் 02.05.2019 ஆகிய தேதிகளில் ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி, 03.05.2019 மற்றும் 04.05.2019 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி, 05.05.2019 மற்றும் 06.05.2019 ஆகிய தேதிகளில் சூலூர் தொகுதி, 07.05.2019 மற்றும் 08.05.2019 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.