Skip to main content

"ஊரடங்கை மீறினால் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்" மத்திய அரசின் புதிய திட்டம்...

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

ஊரடங்கை மீறுபவர்கள் மற்றும் தவறான கருத்துக்களைப் பரப்பும் நபர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 -ன் படி மாநில அரசுகள் வழக்கு பதிவுசெய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

Union Home Secretary Ajay Bhalla has written to Chief Secretaries of all states

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை மீறுபவர்கள் மற்றும் தவறான கருத்துக்களைப் பரப்பும் நபர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 -ன் படி மாநில அரசுகள் வழக்கு பதிவுசெய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், "மார்ச் 24 முதல் பின்பற்றப்பட்டுவரும் ஊரடங்கை மீறும் எந்தவொரு நபரும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் 51 முதல் 60 வரையிலான சட்டப்படியும், ஐபிசியின் 188 ஆவது சட்டப்பிரிவின் படியும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ள இந்த சட்டங்களின்படி விதிகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்