Skip to main content

சேலம் மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது யார் யார்?

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும், கொளத்தூர் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான இடங்களில் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுமே தலைவர், துணைத்தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றுள்ளன. துணைத்தலைவர் பதவிகளை மூன்று இடங்களில் மட்டுமே திமுக கைப்பற்றியுள்ளது.

 

 Who took the office of President and Vice-President of the Union Committee in Salem?



சேலம் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக தலைவர் துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியவர்கள் விவரம்:


1. ஆத்தூர் ஒன்றியம்:

தலைவர்: லிங்கம்மாள் (அதிமுக)
துணைத்தலைவர்: கன்னியப்பன் (தேமுதிக)

2. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்:

தலைவர்: பார்வதி (அதிமுக)
துணைத்தலைவர்: புவனேஸ்வரி (திமுக)

3. கெங்கவல்லி ஒன்றியம்

தலைவர்: பிரியா (அதிமுக)
துணைத்தலைவர்: விஜேந்திரன் (சுயேச்சை)

4. இடைப்பாடி ஒன்றியம்:

தலைவர்: குப்பம்மாள் (அதிமுக)
துணைத்தலைவர்: ராணி (அதிமுக)

5. காடையாம்பட்டி ஒன்றியம்:

தலைவர்: மாரியம்மாள் (அதிமுக)
துணைத்தலைவர்: மகேஸ்வரி (அதிமுக)

6. கொங்கணாபுரம் ஒன்றியம்:

தலைவர்: கரட்டூர் மணி (அதிமுக)
துணைத்தலைவர்: வைத்தியலிங்க முருகன் (அதிமுக)

7. மகுடஞ்சாவடி ஒன்றியம்:

தலைவர்: லலிதா (அதிமுக)
துணைத்தலைவர்: சரஸ்வதி (அதிமுக)

8. மேச்சேரி ஒன்றியம்:

தலைவர்: தனலட்சுமி (அதிமுக)
துணைத்தலைவர்: தேர்தல் ஒத்திவைப்பு

9. நங்கவள்ளி ஒன்றியம்:

தலைவர்: பானுமதி (பாமக)
துணைத்தலைவர்: சண்முகம் (அதிமுக)

10. ஓமலூர் ஒன்றியம்:

தலைவர்: ராஜேந்திரன் (அதிமுக)
துணைத்தலைவர்: செல்வி (பாமக)

11. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்:

தலைவர்: சின்னதம்பி (அதிமுக)
துணைத்தலைவர்: முருகேசன் (அதிமுக)

12. பனமரத்துப்பட்டி ஒன்றியம்:

தலைவர்: ஜெகநாதன் (அதிமுக)
துணைத்தலைவர்: குமார் (திமுக)

13. சேலம் ஒன்றியம்:

தலைவர்: மல்லிகா (அதிமுக)
துணைத்தலைவர்: அல்லி (இந்திய கம்யூ.,)

14. சங்ககிரி ஒன்றியம்:

தலைவர்: மகேஸ்வரி (அதிமுக)
துணைத்தலைவர்: சிவக்குமரன் (அதிமுக)

15. தலைவாசல் ஒன்றியம்:

தலைவர்: ராமசாமி (அதிமுக)
துணைத்தலைவர்: அஞ்சலை (பாமக)

16. வாழப்பாடி ஒன்றியம்:

தலைவர்: சதீஸ்குமார் (அதிமுக)
துணைத்தலைவர்: சுமதி (தேமுதிக)

17. வீரபாண்டி ஒன்றியம்:

தலைவர்: வருதராஜ் (அதிமுக)
துணைத்தலைவர்: வெங்கடேசன் (அதிமுக)

18. ஏற்காடு ஒன்றியம்:

தலைவர்: சாந்தவள்ளி (அதிமுக)
துணைத்தலைவர்: சேகர் (திமுக)

19. கொளத்தூர் ஒன்றியம்:

தலைவர்: தேர்தல் ஒத்திவைப்பு
துணைத்தலைவர்: மாரப்பன் (பாமக)

 

சார்ந்த செய்திகள்