Skip to main content

 கிராமசபை கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

   நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முமுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் தங்களின் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களாக கொடுப்பார்கள். அதன்படி  குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. 

 

k

     

இதில் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களுடன் கலந்து கொண்டு அந்த பகுதியின் பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் கணியாங்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற குமரி மாவட்ட துணை செயலாளர் ராஜன் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு அந்த ஊராட்சியில் இருந்து வரும் அடிப்படை பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக கொடுத்தனர்.

 

k

   

 ரஜினி மக்கள் மன்றத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவை முதலில் வாங்க மறுத்த அதிகாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சனை பொது மக்கள் முற்றுகையிட்டதையடுத்து அவர் மனுவை வாங்கினார். இவர்கள் கொடுத்த மனுவில் அந்த ஊராட்சியில் அதிகம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அங்கு அழகன்பாறை, ஆலம்பாறை, பாறையடி, பண்டாரதோப்பு பகுதிகளில் இருந்து வரும் குண்டும் குழியுமான சாலைகள் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினைகள் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய கேட்டும் மனு கொடுத்தனர்.

 

      இந்த கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுக்கபட்டது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்