
விஐபி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கிராமத்தை மையப்படுத்தி கேங்ஸ்டர் கலந்த சமூக படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், டேனியல் அனி போப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே அறிவித்தது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.