ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதத்தில் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் சினிமா, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் இடத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரதா கபூர் நடித்த இந்தி படமான ‘ஸ்ட்ரீ 2’ இடம் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898 ஏ.டி., மூன்றாவது இடத்தில் விக்ராந்த் பாஸ்ஸி நடித்த 12த் ஃபெயில், நான்காவது இடத்தில் கிரண் ராவ் லாபட்டா லேடிஸ், பிரசாத் வர்மா நடித்த ஹனுமேன், ஆறாவது இடத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, சிதம்பரம் இயக்கிய மஞ்சும்மெல் பாய்ஸ், எட்டாவது இடத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், ஒன்பதாவது இடத்தில் பிரபாஸ் நடித்த சலார், பத்தாவது இடத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.