Skip to main content

கிளாமராக புகைப்படம் எடுக்க காரணம் இருக்கிறது - ரகுல் ப்ரீத் சிங்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
rak


'தடையற தாக்க', 'என்னமோ எதோ' படங்களின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத்தி சிங், தீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஒரு பிரபல இதழுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை பற்றி ரகுல் பேசியபோது..... "நான் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. பக்கத்து வீட்டு பெண்மாதிரி இருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் செய்யலாமா...என்று பலர் கேட்கிறார்கள். கவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை. நிறைய பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். கவர்ச்சி தவறானது அல்ல. நிறமும், நல்ல உடல் அமைப்பும் இருந்தால் கவர்ச்சியாக இருக்கலாம். எந்த நடிகையானாலும் கவர்ச்சியாக போஸ் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது. உனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா...என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை அப்படி எதுவும் நடந்தது இல்லை. சினிமா வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அழகி போட்டியில் பங்கேற்றேன். ஆனால் வெற்றி பெறவில்லை. அந்த போட்டி நடந்து ஏழு ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் அப்போது நடந்த அழகி போட்டி என் வாழ்க்கையை மாற்றி என்னை நடிகையாக மாற்றி விட்டது. இப்போது அழகி போட்டிக்கு என்னை நடுவராக அழைக்கிறார்கள். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். இந்த அனுபவங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கும்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்