Published on 03/04/2018 | Edited on 04/04/2018

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட புகழ் கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாயீஷா சய்கல் இணைந்து நடிக்கும் 'ஜூங்கா' படத்தின் படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தையும் மீறி போர்ச்சுக்கலில் நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் மடோனா செபாஸ்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.