
விஐபி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கம் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கிராமத்தை மையப்படுத்தி கேங்ஸ்டர் கலந்த சமூக படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்னேற்பாடாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 8ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் "மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று" என்று பதிவிட்டுருந்தார்.