
‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து கோஷ். பின்பு ரஜினி, கமல், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக நகைச்சுவை நடிகராக தனது உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழைத் தவிர்த்து மற்ற இந்திய மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பின்பு சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
சமீப காலமாக பொருளாதார சிக்கலில் இருந்துள்ள இவர் வயது மூப்பின் காரணமாக உடல் நலப்பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாகச் சிகிச்சை பலனின்றி இவர் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 76. இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். பிந்து கோஷின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.