Skip to main content

நடிகர் பூ ராமு மருத்துவமனையில் அனுமதி

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Actor poo Ramu admitted hospital

 

கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இதற்கு முன்பு கமல்  நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. இதன் காரணமாகத்தான் இவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இன்னும் சில படங்களில் பூ ராமு நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள்  பூ ராமுவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் நலம் பெற வேண்டும் என திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்