Skip to main content

உறியடி 2ஆம் பாகத்தில் சூர்யா... 

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
uriyadi

 

 

 

தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் சூர்யாவின் 2டி நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படம் 'உறியடி 2'.  'உறியடி' பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ள இப்படத்தில் 'உறியடி' பட நாயகன் விஜய்குமார் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில்  'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர் மற்றும் 'உறியடி'யில் கவனம் ஈர்த்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் விஜய்குமார் இணை தயாரிப்பாளராக இணையும் இப்படத்திற்கு '96' பட இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைக்கிறார். சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜூடன் அதேசமயம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. மேலும் படப்பிடிப்பும் இன்று துவங்கி தொடர்ந்து குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்