Skip to main content

பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

bigg boss 5

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

 

தற்போது 5ஆவது சீசனுக்கான செட் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஆரம்பக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் தொடக்க நிகழ்ச்சியானது அக்டோபர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்