Skip to main content

இன்றைய ராசிபலன் - 07.05.2024

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

07-05-2024, சித்திரை 24, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.41 வரை பின்பு அமாவாசை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.32 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். சர்வ அமாவாசை. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 07.05.2024

mesham

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் சாதகப்பலன் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை குறையும்.


3

மிதுனம் 

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.


kadagam

கடகம்

இன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம்.
 

5

சிம்மம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 5.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெரியவர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது.
 

kannirasi

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
 

thulam

துலாம்

இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
 

danush

தனுசு

இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாப,ங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிட்டும்.


magaram

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக தேக்கங்கள் விலகி நல்லது நடக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.

kumbam

கும்பம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தேவைகள் யாவும் நிறைவேறும்.
 

meenam

மீனம்

இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் குறையும்.