Skip to main content

டிடிவி தினகரன் மக்களுக்கு நல்லதே சொல்வதில்லை;அமைச்சர் காமராஜ் பேச்சு!!

Published on 21/11/2018 | Edited on 21/11/2018

 

 

kamaraj

 

கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார். 

 


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி , வீரமணி ,காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது. 

 

 

"திருவாருர் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை 548  கால்நடைகள் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



டிடிவி.தினகரன் பொதுமக்களிடம் நல்ல செய்திகளைக் கூறுவதே இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக ஏதாவது பேசிக் கொண்டு வருகிறார். அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை". என கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்