Skip to main content

உத்தரவு வரும்வரை ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவானது ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் மத்திய அரசும் நாடளவில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

Tamil Nadu government announcement

 

அதேபோல் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பானது வந்துள்ளது. தமிழக அரசின் வல்லுனர் குழு முதற்கட்ட கூட்டம் நடத்தி கொடுக்கப்படும் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முடிவு எடுக்க உள்ளார். எனவே இது தொடர்பான அரசின் ஆணை வெளியாகும் வரை தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்